ஓசூர் அருகே உள்ள பாகலூரைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(27). இவர் 2015ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஓசூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்தனர்.
15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை! - 15 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
15 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை
இந்த வழக்கின் விசாரணை, கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. இறுதி விசாரணைக்குப் பின்னர் நீதிபதி அன்புச்செல்வி, சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சந்திரசேகருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.