தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்தது. இதில் 23 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 219 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 326 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள், இரண்டாயிரத்து 221 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்கட்டமாகத் தேர்தல் நடந்த ஓசூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மத்தூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், தளி ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை தளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஊத்தங்கரை ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகின்றன.
இதே போல், பர்கூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியிலும், கெலமங்கலம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், சூளகிரி ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்பட்டுவருகின்றன.
விரைவு மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தருமபுரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களுக்கு ஊராக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது, தருமபுரி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பதிவான வாக்குகள் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் எண்ணப்பட்டுவருகின்றன. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையம் குறித்த முறையான அறிவிப்புகள் அறிவிக்காத காரணத்தால் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் குளறுபடியால் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது.
இதையும் படிக்க: நாட்டுக்கு எதிரானது அல்ல, உங்களுக்கெதிரான போராட்டம்: நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் பதில்