கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி, குளம் ஆகியவற்றை புனரமைக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார்.
குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் - ஆட்சியர் ஆய்வு - krishnagiri inspector inspection
கிருஷ்ணகிரி: குடிமராமத்து திட்டத்தின் கீழ் மாவட்ட புனரமைப்பு பணிகளை ஆட்சியரும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை கூடுதல் இயக்குநரும் ஆய்வு மேற்கொண்டனர்.
அதனடிப்படையில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், குளம், குட்டைகளின் புனரமைப்பு பணிகளுக்காக தலா ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது. இதில் கால்வாய், குளம், நீர் வெளியேற்று கால்வாய் ஆகியவற்றை தூர்வாரப்படுவதோடு மட்டுமல்லாமல் மதகுகளும் சரிசெய்யப்பட உள்ளன.
மேலும், அகசிப்பள்ளி ஊராட்சியில் உள்ள பாப்பனேரியில் நடக்கும் புனரமைப்பு பணிகளையும், சூளகிரி ஒன்றிய மருதாண்டப்பள்ளி, சூளகிரி ஊராட்சியில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டு விவசாயிகளிடம் தற்போதைய நிலத்தடி நீர்மட்டம் மற்றும் ஏரியில் நீர் சேமிக்கும்போது விவசாய பாசன பயன்பாடு குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.