இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தெரிவிக்கும்போது, "சிறப்புத் திட்டமான குடிமராமத்துப் பணிகள் நமது மாவட்டத்தில் மொத்தம் 100 ஏரிகள், 325 குளம்-குட்டைகளில் தூர்வாரும் பணி நடைபெற்றுவருகிறது. தற்போது கூடுதலாக நூறு ஏரிகள் தூர்வாரும் பணி மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அனுமதி வழங்கியுள்ளார்கள்.
குடிமராமத்துப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு! - குடிமராமத்து பணி
கிருஷ்ணகிரி: சூளகிரி பகுதியில் 200 ஏரிகள், 325 குளம்-குட்டைகளில் நடைபெற்றுவரும் குடிமராமத்துப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியிர் நேரில் ஆய்வு செய்தார்.
இதனால் 200 ஏரிகள், 325 குளம்-குட்டைகள் என மொத்தம் 525 பணிகள் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக முடிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட இம்மிடிநாயகனப்பள்ளி, மருதாண்டப்பள்ளி, துப்புகானப்பள்ளி, கானலட்டி, உள்ளட்டி, சாமனப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, கொம்மேப்பள்ளி, ஆலூர், அத்திமுகம் ஆகிய பத்து ஊராட்சிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஏரி தூர்வாரும் பணிகளும் 34 குளம்-குட்டைகளும் தலா ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவருகிறது.
அதேபோல உள்ளட்டி சிறு பாசன ஏரி 9.36 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.