தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநங்கைகளுக்கு சீர்வரிசை வழங்கி தர்பாரை கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்! - கிருஷ்ணகிரி மாவட்டச் செய்திகள்

கிருஷ்ணகிரி: ஓசூரில் திருநங்கைகளுக்கு சேலை உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களை வழங்கி ரஜினி ரசிகர்கள் தர்பார் வெளியீட்டை கொண்டாடினர்.

RAJINI DHARBAR NEWS  ஓசூர் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்  திருநங்கைகளுக்கு சீர்வரிசை வழங்கி தர்பாரைக் கொண்டாடிய ரசிகர்கள்  கிருஷ்ணகிரி மாவட்டச் செய்திகள்  krishnagiri hosur rajini fans celeberate darbar movie and they give gift to transgender
திருநங்கைகளுக்கு சீர்வரிசை வழங்கி தர்பாரை கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

By

Published : Jan 9, 2020, 11:27 PM IST

நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இன்று தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி ஓசூரில் 4 திரையரங்குகளில் தர்பார் திரைப்படம் வெளியாகியுள்ளது. நேற்றிரவு முதலே ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் தர்பார் வெளியீட்டை கொண்டாடினர்.

அதிகாலையில் சிறப்பு காட்சிகளைப் பார்த்துவிட்டு வந்த ஓசூர் பகுதி ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் திரையரங்கின் வெளியே கரும்புகளை கட்டி, சமத்துவப் பொங்கல் வைத்து பொங்கலைக் கொண்டாடினர்.

திருநங்கைகளுக்கு சீர்வரிசை வழங்கி தர்பாரை கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

மேலும், தர்பார் திரைப்படத்தைக் காணவந்த திருநங்கைகள் அனைவருக்கும் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் சார்பில் சேலை உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் மற்றும் உணவு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: ரஜினி புகைப்படத்தால் காரை அலங்கரித்த ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details