நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி மற்றும் ஜே.சி.ஐ கிருஷ்ணகிரி மேங்கோ டவுன் இணைந்து 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்கள் இந்தியதேர்தல் ஆணைய குறியீட்டை மூவர்ணக்கொடி வர்ணத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அணிவகுத்து நின்றனர்.
பின்பு இந்நிகழ்ச்சி குறித்து ஜே.சி,ஐ. சார்பாக கின்னஸ் சாதனை விருதிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சாதனை உறுதி செய்யப்பட்டு அதற்கான சான்று கல்லூரிக்கு வழங்கப்பட்டது. அச்சான்றிழை நேற்று மாவட்ட ஆட்சியர் கல்லூரிக்கு வழங்கினார். பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர், இந்த சாதனைகளை நிகழ்த்திய கல்லூரி முதல்வர்,பேராசிரியர்கள் மற்றும் மாணவியருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.