தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூ வியாபாரியை ஏடிஎம் கொள்ளையனாக மாற்றிய ஊரடங்கு! - பூ வியாபாரி ஏடி எம் கொள்ளை

கிருஷ்ணகிரி : ஊரடங்கால் வாழ்வாதாரம் இழுந்த பூ வியாபாரி ஒருவர் விரக்தியில் ஏடிஎம் மையத்தைத கொள்ளையடிக்க முயன்று, காவல் துறையினரிடம் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

flowere vendors turns burglar
flowere vendors turns burglar

By

Published : May 13, 2020, 11:04 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார். 27 வயதான இவர், அஞ்செட்டியில் பூ வியாபாரம் செய்து வந்தார். கரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், ராஜேஷ் குமாரில் பூ வியாபாரம் முற்றிலுமாக முடங்கியது.

கைதான ராஜேஷ்குமார் !

இதனால், இவர் தனது தொழிலுக்குத் தனியாரிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போனது. இவருக்குக் கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ராஜேஷ் குமார் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிப்பது என்ற விபரீத முடிவுக்கு வந்தார்.

அதற்காக, தேன்கனிகோட்டை அருகில் உள்ள அந்தேவனப்பள்ளி என்ற இடத்தில் இருக்கும் ஏடிஎம் மையத்தைத் தேர்வு செய்தார். ராஜேஷ் குமார், இன்று அதிகாலை அந்தேவனப்பள்ளி ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்து கதவை உட்புறமாகப் பூட்டிக் கொண்டு கொள்ளை முயற்சியை மேற்கொண்டார்.

பூ வியாபாரி உடைக்க முயன்ற ஏடிஎம்
ஏடிஎம் மையத்திலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டு உஷாரான இரண்டு பேர் ஏடிஎம் மையத்தின் கதவை வெளிப்புறமாக பூட்டியதில் ராஜேஷ் குமார் தப்பி ஓட முடியாமல் பிடிபட்டார். இதையடுத்து, நிகழ்விடம் வந்த காவல் துறையினர் ராஜேஷ் குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க : 'பழக்கடைகளை சேதப்படுத்திய ஆணையர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?' - மனித உரிமை ஆணையம்

ABOUT THE AUTHOR

...view details