திமுகவின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினருமான செங்குட்டுவனுக்கு நேற்று (ஜூலை 18) லேசான காய்ச்சல் இருந்ததால், ஓசூரில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, இன்று வெளியான முடிவில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கரோனா தொற்று உறுதி - செங்குட்டுவன் எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று உறுதி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 16ஆம் தேதி திமுக எம்எல்ஏக்களான ஓசூர் சத்யா, தளி பிரகாஷ், வேப்பணம்பள்ளி முருகன் ஆகியோருடன் சேர்ந்து ஆட்சியர் பிரபாகரனை செங்குட்டுவன் சந்தித்தார். அதன்பின், கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து சிறிது தூரம் ஊர்வலமாகச் சென்றார். ஊர்வலம் முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் செங்குட்டுவனுக்கு கரோனா உறுதியான தகவலை, மாவட்ட மருத்துவ நலப்பணிகள் துணை இயக்குநர் உறுதி செய்தார்.