நாட்டின் 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தேசியக்கொடியை பறக்கவைத்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர், காவல் துறை, ஊர்காவல் படை, ஆயுதப்படை, தேசிய மாணவர் படை அமைப்பைச் சேர்ந்தவர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து, சுதந்திரப் போராட்ட தியாகிகள் கௌரவிக்கப்பட்டனர்.
71ஆவது குடியரசு தினவிழா: மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி சிறப்பு! - ஆட்சியர் கொடியேற்று வைத்து மரியாதை
கிருஷ்ணகிரி: 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இரண்டாயிரம் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
republic day
இதனைத் தொடர்ந்து 10 துறைகளின் சார்பில், 270 பயனாளிகளுக்கு சுமார் ஒரு கோடியே 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களையும் அவர் வழங்கினார். இறுதியாக பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த இரண்டாயிரம் மாணவர்கள் பங்கேற்ற வண்ணமிகு கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதையும் படிங்க: அருவியில் குளித்த இளைஞர்கள் மரணம்: உதகையில் உடலை மீட்க போராட்டம்