டிசம்பர் 27ஆம் தேதியில் கிருஷ்ணகிரியில் உள்ள - ஒசூர், காவேரிப் பட்டினம், மத்தூர், தளி, ஊத்தங்கரை ஒன்றியங்கள் ஆகியவற்றிலும், டிசம்பர் 30ஆம் தேதியில் கிருஷ்ணகிரியில் உள்ள - பர்கூர், கேளமங்கலம், கிருஷ்ணகிரி, சூளகிரி, வேப்பனபள்ளி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இதனையொட்டி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பல்வேறு புகார்களை தொலைபேசி வழியாக பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் கட்டுப்பாடு அறையை, மாவட்ட ஆட்சியர் பிரபாகர் நேற்று திறந்துவைத்தார்.