கிருஷ்ணகிரி ஒன்றியம் ஆலப்பட்டி ஊராட்சியில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், சாமன்குட்டையில் தூர்வாரும் பணிகள் மற்றும் கரையை பலப்படுத்தும் பணிகள், 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆலப்பட்டி ஏரி ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் தூர்வாரும் பணிகளும், கங்கலேரி ஊராட்சியில் எட்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட தவளம் ஏரி ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏரி குளங்கள் தூர்வாரும் பணிகள் - ஆட்சியர் அதிரடி ஆய்வு! - ஏரி குளங்கள் தூர்வாரும் பணிகள்
கிருஷ்ணகிரி: ஆலப்பட்டி, கங்கலேரி ஆகிய ஊராட்சிகளில் குட்டை மற்றும் ஏரியை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
![ஏரி குளங்கள் தூர்வாரும் பணிகள் - ஆட்சியர் அதிரடி ஆய்வு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4225263-1085-4225263-1566599367342.jpg)
ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள், நீர் வெளியேற்று கால்வாய்கள், மதகுகள், தூர்வாரி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரிக் கரைகளைப் பலப்படுத்த வேண்டும். மேலும் இந்த குடிமராமத்து திட்டத்திற்குப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஏரியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள விவசாயிகள் தாங்களாக முன்வந்து அரசுக்குச் சொந்தமான நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆலப்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த ஆட்சியர், நோயாளிகள் வருகைப் பதிவேடு, நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை அளிக்கவும், மருத்துவரிடம் எடுத்துரைத்தார். தொடர்ந்து ஆய்வகம், மருந்து இருப்புகள், குடிநீர், கழிப்பறை வழதிகள் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவமனை வளாகத்தைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். மருத்துவமனையைச் சுற்றி மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை பணியாளர்களைக் கேட்டுக்கொண்டார்.