தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணகிரி அணைக்கு வரும்  நீரின் அளவு உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி! - நீரின் அளவு அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு, உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்‌.

krishnagiri dam
krishnagiri dam

By

Published : Jun 1, 2020, 6:20 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் தற்போது 40.67 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தினால் அணைக்கு வரும் 640 கன அடி தண்ணீரையும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விட்டுள்ளனர்.

இதனால், கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முற்றிலும் வறண்ட நிலையிலிருந்த கிருஷ்ணகிரி அணைக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால், அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 27.45 அடி உயரத்திற்கு நீர் தேங்கியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி அணைக்கு 410 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் 294 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றுப் படுகையில் பெய்து வரும் மழையால் 294 கன அடியில் இருந்து 410 கன அடியாக, நீர் வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுற பாசனக் கால்வாய்கள் மூலம் 12 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details