தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு - Krishnagiri Corona

கிருஷ்ணகிரி: எல்லைப்பகுதிகளில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் அய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

By

Published : Mar 16, 2020, 9:53 PM IST

Updated : Mar 17, 2020, 12:01 AM IST

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் உத்தரவின் பேரில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதல் கட்டமாக மாவட்டத்தில் 22 சினிமா தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அனைத்து தொடக்கப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோல் கிருஷ்ணகிரியில் ஓசூர், நல்லூர், கக்கனூர், குமளாபுரம் உள்ளிட்ட 16 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டிற்குள் நுழையும் வாகனங்களை நிறுத்தி கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

இதில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போக்குவரத்துத்துறை, காவல்துறை, வனத்துறை, நகராட்சி, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஓசூர் அருகே ஜுஜுவாடி பகுதியில் வாகனங்களுக்கு நோய்த்தடுப்பு கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க: நெல்லையில் கரோனா அறிகுறி - கணவன், மனைவி அரசு மருத்துவமனையில் அனுமதி!

Last Updated : Mar 17, 2020, 12:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details