தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனுமதி இல்லாமல் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்! - collector order

பொதுமக்கள் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருமணம், மருத்துவ சிகிச்சை, டையாலிசிஸ், இதர மருத்துவ சிகிச்சைகள், இறப்பு ஆகிய அத்தியாவசியப் பணிக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

collector order
collector order

By

Published : Apr 28, 2020, 4:12 PM IST

கிருஷ்ணகிரி: ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுமதி இல்லாமல் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருவதாலும், மாவட்டத்தில் தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாலும், முக்கிய தேவைகளுக்கு மட்டுமே பயணச் சீட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.

பொதுமக்கள் அத்தியாவசிய பயன்பாட்டிற்கு மட்டும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், தமிழ்நாடு அரசு ஆணையில் குறிப்பிட்டுள்ள படி அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்திப் பணியில் ஈடுபட நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். அதற்கும் கீழ் கண்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தங்கள் மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான உத்தரவு நகல் உங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்கள், நிறுவனங்கள் தங்கள் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து அறிந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறை எண்களான (04343) 230041, 230041, 230041, 234444, 1077 234 444 என்பனவற்றிற்கு தொடர்புகொள்ளலாம் என்றும், அல்லது 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கீழ்கண்ட இணைய முகவரியை விண்ணப்பிப்பதற்கு பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://serviceonline.gov.in/tamilnadu/directApply.do?serviceld=721

ABOUT THE AUTHOR

...view details