கிருஷ்ணகிரி மாவட்டம், நாச்சிக்குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 3ஆம் வகுப்பு பயிலும் மாணவன் சிவமணி, 2ஆம் வகுப்பு பயிலும் மாணவன் நவதீப் ஆகியோர் சென்னையில் நடைபெற்ற டிரம்ஸ் ஆஃப் ரெக்கார்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அதில், சிவமணி 4 நிமிடம் 3 விநாடிகளில் 101 திருக்குறள்களையும், நவதீப் 1 நிமிடம் 3 விநாடிகளில் தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளின் பெயர்களை கூறியும் உலக சாதனைப் படைத்துள்ளனர்.
இவர்களது சாதனை முந்தைய சாதனையாளர்களைவிட இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் முந்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்த இளம் சிறார்களுக்கு அரசு சார்பில் கேடயங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.