பிரதம மந்திரியின் வேளாண்மை நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நடப்பாண்டு 2020-2021இல் தோட்டக்கலைத்துறை மூலம் 14,400 ஹெக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த ரூ.100 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சிறு, குறு விவசாயிகளுக்கு நூறு விழுக்காடு மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதம மந்திரியின் வேளாண்மை நுண்ணீர் பாசனத் திட்டதின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களை பாசனம் செய்ய ஏதுவாக ஆழ்துளை கிணறு அமைக்க 399 பேருக்கு ரூ. 99.75 லட்சமும், டீசல் அல்லது மின் மோட்டார் அமைக்க 1,272 பேருக்கு ரூ. 190.80 லட்சமும், நீர்பாசன இணைப்புக் குழாய்கள் அமைக்க 3,043 நபர்களுக்கு ரூ. 304.30 லட்சமும் மேலும் தரைமட்ட நீர் சேமிப்பு கட்டமைப்பு அமைக்க 754 நபர்களுக்கு 301.60 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.