ஒன்பது மாவட்டங்கள் நீங்கலாக முதற்கட்ட தேர்தலானது டிசம்பர் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 9,624 கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 91,975 பதவிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் ஒரு கோடியே 30 லட்சத்து 43,528 பெண்கள், ஒரு கோடியே 28 லட்சத்து 25,778 ஆண்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 1,635 பேர் என மொத்தம் இரண்டு கோடியே 58 லட்சத்து 70,941 பேர் வாக்களிக்க உள்ளனர்.