தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏரிக்கு தண்ணீர் நிரப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு! - காவேரிப்பட்டணம் பண்ணந்தூர் பெரிய ஏரி

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் பண்ணந்தூர் பெரிய ஏரியில் இருந்து சின்ன ஏரிக்கு தண்ணீர் நிரப்புவதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Krishnagiri collector
Krishnagiri collector

By

Published : Dec 3, 2019, 7:44 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பண்ணந்தூர் பெரிய ஏரியில் இருந்து சின்ன ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் பண்ணந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பண்ணந்தூர் பெரிய ஏரியில் வடியும் உபரி நீரை சின்ன ஏரிக்கு கொண்டு செல்லும் வகையில் பண்ணந்தூர் வேளாண்மை சங்கம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள கிணற்றிலிருந்து 25 எச்.பி. மின் மோட்டார் மூலம் தண்ணீர் பைப் லைன் மூலமாக உயர்மட்ட தொட்டிக்கு நீரேற்றம் செய்து, அவற்றிலிருந்து சின்ன ஏரிக்கும் தண்ணீர் கொண்டு செல்ல வேளாண்மை சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் மின் மோட்டார் பயன்படுத்துவதன் மூலமாக ஊராட்சிக்கு அதிகமான மின்கட்டணம் ஏற்படுவதைக் கருத்தில்கொண்டு ஊரக வளர்ச்சித்துறை சார்பாக சோலார் பேனல் அமைத்து, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து மின் மோட்டார் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரபாகர் குறிப்பிட்டார்.

ஏரிக்கு தண்ணீர் நிரப்புவதற்கான பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

இதன் மூலமாக சின்ன ஏரிக்கு நீர் செல்வதன் மூலம் பண்ணந்தூர், பாப்பாரப்பட்டி, தாமோதரஅள்ளி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 350 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. இந்த நிதியை கொண்டு 30 கிலோ வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் சோலார் பேனல் அமைத்து மின் மோட்டார் இயக்கப்படும். இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபாகர், அரசு அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details