நாடு முழுவதும் கடந்த 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் பெண்களுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனை முன்னிட்டு இன்று கிருஷ்ணகிரியில் மாவட்ட மகப்பேறு மருத்துவ சங்கம், இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பெண் காவலர்களுக்கு சிறப்பு புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.