தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கால் டாக்ஸி ஓட்டுநர்கள் இணையவழி போராட்டம்! - வங்கி கடன்

கிருஷ்ணகிரி: கரோனா பெருந்தொற்று நெருக்கடிக்கு மத்தியில் யாருக்கும் தொந்தரவு அளிக்காமல் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கால் டாக்ஸி ஓட்டுநர்கள் இணையவழி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

krishnagiri drivers association
call taxi drivers internet protest

By

Published : Jun 10, 2020, 2:58 PM IST

கிருஷ்ணகிரி மாவட்ட கால் டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் சங்கம் சார்பில் இணைய வழிப் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் நாகராஜ் (எ) நவாஸ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் கரோனா ஊரடங்கு காலத்தில் சாலை வரி கடன்களுக்கான வட்டியை நீக்க வேண்டும், ஓட்டுநர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும், மானியத்துடன் அரசு வங்கியில் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தக் கோரிக்கைகளை தங்களது செல்போன் மூலம் வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் மூலமாக இணையவழியில் அனுப்பினார்கள்.

இந்நிகழ்வில், தர்மலிங்கம், நிசார், சிவலிங்கம், அரப்ஜான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:லேஸ், குர்குரே அடைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை!

ABOUT THE AUTHOR

...view details