தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓசூரில் லாரிகள் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்!

கிருஷ்ணகிரி: ஓசூரில் டிப்பர் லாரியும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

krishnagiri-at-hosur-tipper-load-lorries-collides-cause-1-dead-and-2-injured
ஓசூரில் டிப்பர் லாரியும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி

By

Published : Feb 16, 2020, 1:43 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கொதக்கொண்டப்பள்ளி மாநில நெடுஞ்சாலையில் டிப்பர் லாரியும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சரக்கு லாரியின் ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே ஒருவர்உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மத்திகிரி காவல் துறையினர் விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபர்களை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவத்தால் சாலைக்கு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றால்அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் நெடுஞ்சாலையில் இருந்த லாரிகள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

விபத்தில் சிக்கிய லாரிகள்

இதையும் படிங்க:மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞர்கள் - மூன்று கார்கள் மீது மோதி விபத்து!

ABOUT THE AUTHOR

...view details