தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணகிரியில் கிருஷ்ணர் கோயில் குடமுழுக்கு விழா - Krishna temple kumbhapisekam near Krishnagiri

கிருஷ்ணகிரி: வெகு விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

கிருஷ்ணகிரி அருகே ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம்
கிருஷ்ணகிரி அருகே ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம் கிருஷ்ணகிரி அருகே ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம்

By

Published : Feb 1, 2020, 11:32 PM IST

கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டிநாயனப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ ருக்மணி, ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கோயிலின் மஹா குடமுழுக்கு விழா கடந்த 28ஆம் தேதி தொடங்கியது.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த குடமுழுக்கு விழாவில், கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், கோபுர கும்பகலச ஹோமம், பூர்ணாதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாக சாலை பூஜைகள் வேத விற்பனர்களால் நடத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி அருகே ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம்

இதனைத் தொடர்ந்து, புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை மேளதாளத்துடன் கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, வேத விற்பனர்களால் கோபுர கலசங்களுக்கு ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. இதன் பின்னர் ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ ருக்குமணி தாயார் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகிய சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதணைகள் நடைபெற்றன.

இந்த குடமுழுக்கு விழாவைக் காண மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டுவந்து சாமி சரிசனம் செய்து வழிப்பட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:2020 பட்ஜெட் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details