தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கமல் தொடங்கிய கட்சியால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை' - கே.பி.முனுசாமி! - கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி: கமல் தொடங்கிய கட்சியினால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி
செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி

By

Published : Feb 21, 2021, 6:44 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியத்திற்குட்பட்ட 6 கிராமங்களில் அம்மா மினி கிளினிக், கால்நடை பன்முக மருத்துவமனை ஆகியவற்றை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை எம்பியுமான கே.பி.முனுசாமி திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளா்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, ரஜினி - கமல் சந்திப்பு குறித்த கேள்விக்கு கூறியதாவது, “இருவரும் நடிகர்கள், நீண்ட காலமாக நண்பர்கள் என்கின்றனர்.

நட்பு ரீதியாக சந்தித்திருக்கலாம். ரஜினி தன்னால் அரசியல் கட்சி தொடங்க முடியாத சூழலில் உள்ளேன் எனக் கூறிவிட்டார். அவரை கமல் சந்தித்து பேசியதை கமல்தான் தெரிவிக்க வேண்டும்.

செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி

கமல் கட்சி தொடங்கியதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, ஏற்படுத்த முடியாது. 60 ஆண்டுகளாக ஜாலியாக இருந்துவிட்டு, மக்களை காப்பாற்றுவேன் என்றால் மக்கள் நம்ப மாட்டார்கள்.

நாங்கள் 60 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்து வருகிறோம். இதுபோன்ற கட்சிகள் திடீரென வரும், பின்னர் காணாமல் போய்விடும்” என விமர்சித்தார்.

இதையும் படிங்க: தேர்தல் யுத்தி! - கேரளாவை பின்பற்றும் கமல்!

ABOUT THE AUTHOR

...view details