கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில், முதல் போக சாகுபடிக்கான தண்ணீரை மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதன் மூலம் ஓசூர் பகுதியில் உள்ள புதுநத்தம், தட்டகாணப்பள்ளி, மோரணப்பள்ளி, முத்தாலி உள்ளிட்ட 22 கிராமங்களில் உள்ள 8,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
முதல் போக பாசனத்திற்காக அணை திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி! - krishnakiri
கிருஷ்ணகிரி: ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக 150 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கெலவரப்பள்ளி
இடது மற்றும் வலது புற கால்வாய்களில் வினாடிக்கு 88 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 150 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறந்துவிடப்படும். இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.