இந்திய பாதுகாப்பு படைப்பிரிவான பைசெண்ட் டிவிசன் அவர்களின் உத்தரவின்படி 174இ ரெஜிமென்டில் இருந்து 2019ஆம் ஆண்டிற்கான சைக்கிள்பேரணி சிங்காரப்பேட்டையிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தொடங்கப்பட்டு மத்தூர், போச்சம்பள்ளி, பாரூர், காவேரிப்பட்டிணம் ஊர் வழியாக வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் நிறைவடைந்தது.
பாதுகாப்பு படையில் சேருவதை ஊக்குவிக்க சைக்கிள் பேரணி ! - krishnagiri
கிருஷ்ணகிரி : இளைஞர்கள் பாதுகாப்பு படையில் சேர்வதை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இளைஞர்கள் இராணுவத்தில் சேர்வதை ஊக்குவிக்கும் விதமாக சைக்கிள் பேரணி
இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் இந்த பேரணியில் முன்னாள் பாதுகாப்பு படை வீரர்களிடம் இருந்து கோரிக்கை அடங்கிய மனுவையும் ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.