தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீர் மேலாண்மை திட்ட முன்னேற்பாடுகளை கேட்டறிந்த மத்திய குழு! - தண்ணீர் பிரச்னை

கிருஷ்ணகிரி: தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் மேலாண்மை திட்ட முன்னேற்பாடு குறித்து, மத்திய குழுவினர் அனைத்து அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.

jal sakthi

By

Published : Aug 14, 2019, 9:22 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை குறித்து மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறைக்கான கூடுதல் செயலாளர் மாஹி தலைமையில், மனிதவள மேம்பாட்டு இயக்குநர் விஜயபாஸ்கர் குராலா, மாவட்ட ஆட்சியர் பிரபாகர், விஞ்ஞானிகள் ஆதிரா, மாதவ் ஆகியோர் கடந்த மாதம் முதல் வாரத்தில், நீர் நிலைகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரை வழங்கிச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு நடத்த மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறைக்கான கூடுதல் செயலர் மாஹி தலைமையில் நேற்று மீண்டும் வருகை தந்தனர்.

முன்னேற்பாட்டு பணிகளை கேட்டறிந்த மத்திய குழு!

பின்னர், அலுவலர்கள் கூட்டத்தில் பேசிய கூடுதல் செயலர் மாஹி, "அரசுப் பள்ளிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பணியாளர்களின் உதவியுடன் மரங்கள் நடும் பணியை அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டும். பயன்பாட்டில் இல்லாத கால்வாய்களை தூர்வாரி, அதன் மூலம் கிடைக்கப்பெறும் மழை நீரை, ஆழ்துளை கிணறுகள் மூலம் நிரப்பும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். தனியார் பங்களிப்புடன் ஏரி, குளம் தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அப்பணிகள் செம்மையாக செயல்படுத்தி, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். விரைவில் நிரந்தரமாக குடிநீர் பிரச்னை தீர்க்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து பல்வேறு விரைவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details