கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பையூர் வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை அறிவியல் மையம் சார்பில் நீர் ஆற்றல் உழவர் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திருவிழாவை மாவட்ட ஆட்சியர் சு. பிரபாகர் தொடங்கிவைத்தார். அப்போது விவசாயிகளுக்கு 10 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொட்டுநீர் பாசன கருவிகளை ஆட்சியர் வழங்கினார்.
உழவர் திருவிழாவில் விவசாயிகளுக்குச் சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்கல்! - ஜல் சக்தி அபியான் உழவர் திருவிழா
கிருஷ்ணகிரி: நீர் ஆற்றல் (ஜல் சக்தி அபியான்) உழவர் திருவிழாவில் விவசாயிகளுக்கு பத்து லட்சம் மதிப்புள்ள சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்கப்பட்டன.
அப்போது பேசிய ஆட்சியர், "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர் ஆற்றல் திட்டத்தின் மூலம் குழுக்கள் அமைத்து நீர் மேலாண்மை பணிகள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. அதில், குடிமராமத்துப் பணிகள் திட்டத்தின் கீழ் இதுவரை 100 ஏரிகள் 325 குளம்
குட்டைகளை தூர்வாரும் பணி நடைபெற்றுவருகிறது.
மேலும், விவசாய நிலங்களுக்குப் பாசன நீரைப் பிரித்து வழங்கும் லஷ்கர் பணியாளர்கள் தற்காலிக பணி அடிப்படையில் நியமித்து அனைத்து பகுதிகளுக்கும் நீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
TAGGED:
JAL SAKTHI SCHEMES