இது குறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர் மேலாண்மை (ஜல்சக்தி அபியான்) திட்டத்தின் கீழ் ஏரிகள், குளங்கள், நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதேபோல ஊரகப் பகுதிகளிலுள்ள நீர்நிலைகளில் குடிமராமத்து, தூர்வாரும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையை மக்கள் எதிர்நோக்கியுள்ள நிலையில், நீர்நிலைகளில் மழைநீரை சேமிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் மூலம் மாவட்டம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட ஏரிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பத்து ஒன்றியங்களில் தலா பத்து ஏரிகள் என மொத்தம் நூறு ஏரிகள் தூர்வாரப்படவுள்ளன.