கிருஷ்ணகிரி நகர் சேலம் நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்ப சாமி திருக்கோவிலில் 32 ஆம் ஆண்டு மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் சன்னதி சென்று வருகின்றனர்.
ஐயப்ப பக்தர்களுக்கு உணவளித்த இஸ்லாமிய சகோதரர்கள்! - இஸ்லாமிய சகோதரர்கள் ஐயப்ப பக்தர்களுக்கு உணவளித்த நெகிழ்ச்சி சம்பவம்
கிருஷ்ணகிரி: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமிய சகோதரர்கள் ஐயப்ப பக்தர்களுக்கு உணவளித்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஐயப்ப பக்தர்களுக்கு உணவளித்த இஸ்லாமிய சகோதரர்கள்!
இந்நிலையில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையிலும், அதனை வலியுறுத்தும் வகையிலும் கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மிலாது நபி விழா குழு சார்பில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அஸ்லாம் தலைமையில் இஸ்லாமிய சகோதரர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி விரதமிருந்து ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அன்னதானம் வழங்கினர்.
இதையும் படிங்க...குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு - சென்னை ஐஐடியில் பேரணி, போராட்டம்