கிருஷ்ணகிரி அணை உள்கோட்ட அலுவலகத்தில் பாளேகுளி ஏரி முதல் சந்தூர் ஏரிவரை உள்ள கால்வாயின் மூலம் பயன்பெறும் ஏரிகளின் பாசனதாரர்கள் சங்கக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பாளேகுளி முதல் சந்தூர்வரை உள்ள 28 ஏரிகளுக்கு முதல் ஏரியிலிருந்து கடைமடை ஏரிவரை அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு ஏரியின் கோடியிலும் மதகு அமைக்க ஊரக வளர்ச்சித் துறை, மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தவும் பாளேகுளி முதல் சந்தூர் ஏரி வாய்க்காலின் சரகத்தில் தொட்டி பாலத்தின் அருகில் 600 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கவும், கவுண்டன் ஏரியிலிருந்து சந்தூர் ஏரிவரை உள்ள 25 ஏரிகளுக்கு ஒரு ஏரிக்கு ஐந்து நாள்கள் வீதம் தண்ணீர் வழங்கவும், பாளேகுளி முதல் சந்தூர்வரை கால்வாய் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.