தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓசூரில் மாவட்டங்களுக்கு இடையேயான கோகோ போட்டி: 400 பேர் பங்கேற்பு - ஓசூரில் கோகோ போட்டி

ஓசூரில் மாவட்டங்களுக்கு இடையே நடைபெற்ற மாணவிகளுக்கான கோகோ விளையாட்டுப் போட்டியில் மாநிலம் முழுவதிலுமிருந்து 400 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

Inter-District Coco Tournament in Hosur: 400 Players Participation
Inter-District Coco Tournament in Hosur: 400 Players Participation

By

Published : Mar 14, 2021, 11:01 AM IST

கிருஷ்ணகிரி:ஓசூர் புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் 38ஆவது ஆண்டாக மாவட்டங்களுக்கு இடையேயான மகளிருக்கான கோகோ போட்டிகள் இன்று (மார்ச்.14) தொடங்கியது. 18 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவிகளுக்கு இடையே நடைபெறும் இந்த கோகோ போட்டிகளை ஓசூர் கோட்டாட்சியர் குணசேகரன் தொடங்கி வைத்தார்.

இந்த கோகோ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதிலிருந்தும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவிகளும் நடுவர்களும் வந்துள்ளனர். கோகோ விளையாட்டினை மாணவிகள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் விளையாடினர்.

ஓசூரில் மாவட்டங்களுக்கு இடையேயான கோகோ போட்டி

இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில கோகோ கழகமும், புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளி நிர்வாகமும் இணைந்து செய்திருந்தன. இந்தப் போட்டியினை விளையாட்டு ஆர்வலர்களும், பொதுமக்களும் கண்டு ரசித்தனர். இப்போட்டிகளின் இறுதி ஆட்டம் நாளை (மார்ச்.15) மாலை நடைபெற உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details