கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்தேக்க அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு கர்நாடக மாநிலம் நந்திமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து உற்ப்பதியாகும் தென்பண்ணை ஆற்று தண்ணீரானது, பெங்களூரு ஓரத்தூர் ஏரியில் இணைந்து அதன் பிறகு ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி நீர் தேக்கத்திற்கு வந்தடைகிறது.
நேற்று வரை கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர் வரத்தானது வினாடிக்கு 596 கனஅடியாக இருந்தது. இந்த நிலையில் கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் தற்போது அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 640 கனஅடியாக அதிகரித்துள்ளது.