நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 17-வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதியன்று 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைப்பெற உள்ளதாக தேர்தல் ஆணையம் மார்ச் 10-ம் தேதி அறிவித்தது.தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே மாநிலத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தது.
ஓசூரு நகராட்சி பகுதியில் தேர்தல் அதிகாரிகள் அலட்சியம் - தேர்தல் விதிமீறல்
கிருஷ்ணகிரி: ஓசூர் நகரப்பகுதியில் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து அரசியல் கொடி கம்பங்கள், சின்னங்கள், தலைவர்கள் சார்ந்த பேனர்கள் அகற்றப்பட வேண்டும் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் ஓசூரில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 96 மணி நேரங்களை கடந்த நிலையில், சார்-ஆட்சியர் அலுவலகத்தின் சுற்றுச்சுவரின் மீது அரசியல் தலைவர்களின் சுவரொட்டிகளும், நகராட்சி பகுதியில் உள்ள மேம்பாலங்களில் எழுதப்பட்டுள்ள விளம்பரங்களும், பல்வேறு இடங்களில் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமலே இருந்து வருகிறது.
ஓசூரில், கோட்டாட்சியர் விமல்ராஜ் அரசியல் கட்சிகளுக்கு விதிமுறைகளை விளக்கி செவ்வாயன்று கூட்டங்கள் நடத்தியும் அரசியல் கட்சிகளோ, அரசு அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அலட்சியப்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.