தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் கிருஷ்ணகிரி கட்டிக்கானபள்ளியில் உள்ள பழைய வீடு ஒன்றை வாங்கி அதனைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார்.
இந்நிலையில் இன்று (ஜன. 28) வீட்டில் உள்ள பழைய தண்ணீர் தொட்டியைப் புதுப்பிக்கும் பணியில் கீழ்புதூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, முருகன், சத்யசாய் நகர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி ஆகிய மூவரும் ஈடுபட்டிருந்தனர். 10 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்ட இந்தத் தண்ணீர் தொட்டிக்குள் தொழிலாளர்கள் மூன்று பேரும் இறங்கியவுடன் ஒருவர் பின் ஒருவராக மூச்சுத் திணறி மயங்கி விழுந்தனர்.
இதனையடுத்து இது குறித்து தீயணைப்புத் துறைக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் தொட்டிக்குள் மயங்கிக் கிடந்த மூன்று பேரையும் வெளியில் எடுத்து முதலுதவி செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு! அப்போது தண்ணீர் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் பெரியசாமி, முருகன் உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த வெங்கடாஜலபதி மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இதையும் படிங்க...'பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாக ஏமாற்றாதீர்கள்' - தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை!