தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதையல் ஆசையில் விவசாயி நரபலி... வாட்ச்மேன் கொடுத்த பகீர் வாக்குமூலம்....

கிருஷ்ணகிரியில் புதையல் ஆசையால் விவசாயி ஒருவர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

By

Published : Oct 1, 2022, 3:36 PM IST

புதையல் ஆசையில் விவசாயி நரபலி
புதையல் ஆசையில் விவசாயி நரபலி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கெலமங்கலம் அருகே உள்ள புதுார்கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி லட்சுமணன் (52). இவரது மனைவி லட்சுமி 4 ஆண்டுக்கு முன் உயிரிழந்தார். இவருக்கு நாகராஜ், சிவகுமார் என்ற 2 மகன்களும், தனலட்சுமி என்ற 1 மகளும் உள்ளனர். இந்த நிலையில் செப்.28ஆம் தேதி வீட்டின் அருகே வெற்றிலை தோட்டத்தில் ஒன்றரை அடி குழியில் லட்சுமணன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். குழியின் முன் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் கோழி மற்றும் மண்வெட்டி இருந்தன.

புதையல் ஆசையில் விவசாயி நரபலி

இதுதொடர்பாக கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமண் உடலை கைப்பற்றி தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தர்மபுரியை சேர்ந்த வாட்ச்மேன் மணி (65) என்பவர் லட்சுமணனை கொலை செய்தது தெரிந்தது. இந்த வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

வாட்ச்மேன் மணியின் பகீர் வாக்குமூலம்:கொலையான லட்சுமணனும், நானும் கடந்த காலத்தில் ஒன்றாக வேலை செய்து வந்தோம். கடந்த 6 மாதங்களுக்கு முன் லட்சுமணன் மகளுக்கு பேய் பிடித்திருந்ததால் பேய் ஓட்டுவதற்காக தர்மபுரியில் இருந்து சிரஞ்சீவி என்ற சாமியார் வரவழைக்கப்பட்டார். அவர் போய் ஓட்டி விட்டு செல்லும் போது வெற்றிலை தோட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில் புதையல் இருப்பதாக எங்களிடம் கூறினார்.

புதையலை எப்படியும் கைப்பற்ற வேண்டும் என்று லட்சுமணனுக்கு ஆசை ஏற்பட்டது. ஆனால் யாரையாவது நரபலி கொடுத்தால் தான் புதையல் கைக்கு கிடைக்கும் என்று சாமியார் சொன்னதாக லட்சுமணன் என்னிடம் சொன்னார். யாரை நரபலி கொடுப்பது என யோசித்தபோது புதுார் கிராமத்தை சேர்ந்த ராணி என்ற பெண் தனக்கு பேய் ஓட்ட வேண்டும் என்று லட்சுமணனிடம் வந்துள்ளார். சம்பவத்தன்று ராணியை வெற்றிலை தோட்டத்திற்கு வருமாறு லட்சுமணன் கூறியிருக்கிறார்.

ஆனால் எதிர்பார்த்தபடி ராணி அங்கு வரவில்லை. அந்நேரத்திலேயே புதையலை அடைய வேண்டும் என்று நினைத்த லட்சுமணன் என்னை கொலை செய்ய முயன்றார். ஆனால் நான் அவரை தாக்கி கொலை செய்து விட்டு நரபலி பூஜை நடத்தினேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:பள்ளிக்கரணை கொலை சம்பவம்...5 கல்லூரி மாணவர்களின் வாக்குமூலம்...ஒருவர் தலைமறைவு

ABOUT THE AUTHOR

...view details