தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருடு போனதை குறைச்சு புகார் கொடு.. நடவடிக்கை எடுக்கிறேன்..! - உரிமையாளரிடம் போலீசார் அடாவடி! - house owner

கிருஷ்ணகிரி: வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தை குறைத்து புகார் அளிக்குமாறு உரிமையாளரிடம் போலீசார் வற்புறுத்திய சம்பவம் ஓசூரில் அரங்கேறியுள்ளது.

வீட்டில் கொள்ளை

By

Published : Apr 22, 2019, 11:57 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் உள்ள வெங்கடேஷ்வரா லே அவுட் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது வீட்டில் கடந்த 17ஆம் தேதி அன்று வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பீரோக்களில் இருந்த பதினாறரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த மாதேஷ் ஓசூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்போது, கொள்ளைப்போன 16 பவுன் தங்க நகை, ரூ.3 லட்சத்து 65 ஆயிரத்திற்கு பதிலாக 9 பவுன் தங்க நகை, 2 லட்சம் ரூபாய் ரொக்கம் மட்டுமே என புகாரில் கூறும்படி போலீசார் மதேஷிடம் தெரிவித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்டு ஓரிரு நாட்களில் விசாரிக்கப்படும் என மாதேஷை அனுப்பி வைத்துள்ளனர். புகாரளித்து 5 நாட்கள் ஆகியும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுக்குறித்து வழக்கும் பதிவும் செய்யவில்லை.

இதுகுறித்து கேட்பதற்காக மாதேஷ், தனது நண்பர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். கொள்ளைபோனது 16 பவுன் தங்கம், 3 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் என வழக்கு பதிவு செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும், நகைகள் வாங்கியதற்கான ரசீதை தரும்படி காவல்துறையினர் கேட்டனர். பின்னர் அதற்கான ரசீதுகளை மாதேஷ் அளித்தார். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்ததால் மாதேஷ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

கொள்ளைப் போனதை கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறையினரே, பணம் மற்றும் நகையின் மதிப்பை குறைத்து புகாரளிக்குமாறு தெரிவித்த சம்பவம் ஓசூர் நகரவாசிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details