கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள கபசுரக் குடிநீர் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாக உள்ளது என சித்த மருத்துவம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசும் கபசுர குடிநீரை மக்கள் பருக அறிவுறுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஒன்றிய அலுவலகம், மகளிர் காவல்நிலையம், வேளாண்மை துறை, போக்குவரத்துக் காவல் நிலையம் என அரசு அலுவலகங்கள் ஒருங்கிணைந்து அமைந்திருப்பதால், தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.