தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகை அடமானக்கடை கொள்ளையர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் - Hyderabad police arrested

கிருஷ்ணகிரி: ஓசூர் நகை அடமானக் கடை கொள்ளையர்களை 12 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஓசூர் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

ஓசூர் நகை கடை கொள்ளையர்களை 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஓசூர் போலீசார் திட்டம்
ஓசூர் நகை கடை கொள்ளையர்களை 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஓசூர் போலீசார் திட்டம்

By

Published : Jan 27, 2021, 6:12 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் முத்தூட் ஃபின்கார்ப் நிதி நிறுவனத்தில் 25 கிலோ தங்க நகை மற்றும் 93 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 7 கொள்ளையர்களை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களை ஓசூர் காவல்துறையினர் நேற்று விசாரணைக்காக அழைத்து வந்தனர். இந்நிலையில் பிடிப்பட்ட நகை கொள்ளையர்கள் 7 பேரிடம் 12 நாள்கள் விசாரணை நடத்த ஓசூர் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:சினிமாவை மிஞ்சிய ஓசூர் கொள்ளையின் சிசிடிவி காட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details