கிருஷ்ணகிரி: 66வது தேசிய அளவிலான ஏர் ரைபிள் சாம்பியன் போட்டிகள் நவம்பர் 27 முதல் டிசம்பர் 2 வரை டெல்லியில் நடைபெற்றன. இந்தியா முழுவதும் பல்வேறு வயதுகளின் பிரிவில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்த நிலையில், தமிழகத்தில் இருந்து 700க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் இந்த போட்டிகளில் பங்கேற்றிருந்தனர்.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரைபிள் கோச்சிங் அசோசியேஷன் சார்பில், 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் பங்கேற்ற தனியார் பள்ளி மாணவி சமிஷா, 600க்கு 596.6 புள்ளிகளையும், நட்சத்திரா 600க்கு 591.3 புள்ளிகளையும் பெற்று, இந்திய அணிக்கான தேர்வு போட்டிகளுக்கும், மூன்று ஆண்டுகள் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளுக்கும் அடுத்தடுத்து தேர்வாகி உள்ளனர்.