மகாராஷ்ரா மாநிலம் நாக்பூரில் கடந்த 10ம் தேதி தேசிய அளவிலான புறாக்கள் பந்தயம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் 200 புறாக்கள் பங்குபெற்றன.
தேசிய அளவில் ஒசூர் புறா 12வது இடம் பிடித்து அசத்தல் - 12வது இடம்
கிருஷ்ணகிரி : நாக்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான புறாக்கள் பந்தயத்தில், ஓசூரை சேர்ந்த புறா 12வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
![தேசிய அளவில் ஒசூர் புறா 12வது இடம் பிடித்து அசத்தல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2696935-146-889270ad-5f0f-413f-a010-25bf4cda5e51.jpg)
பந்தயத்தில் வெற்றிப்பெற்ற புறா
இதில் தமிழகம் சார்பில் கலந்துக் கொண்ட ஓசூர் தாண்டவமூர்த்தியின் புறா 52 மணி நேரத்தில் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடந்து தேசிய அளவில் 12வது இடத்தையும், தமிழகம் அளவில் 4வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளது.
இதற்கு அப்பகுதி மக்கள் தாண்டவமூர்த்திக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.