கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குடிசலூர் கிராமத்தைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் ராஜம்மா (47). இவர் அய்யூர் பகுதியில் நடைப்பெற்று வரும் மாதேஸ்வர சுவாமி திருவிழாவில் பங்கேற்க சென்றுள்ளார். அய்யூர் அருகே உள்ள ஜவளசந்திரம் என்னும் பகுதியில் சென்ற ராஜம்மாவை ஒற்றை காட்டுயானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
ஓசூரில் ஒற்றை காட்டுயானை தாக்கி பெண் பலி! உறவினர்கள் போராட்டம் - lady death by elephant attack
கிருஷ்ணகிரி: அய்யூர் அருகே ஒற்றைக்காட்டு யானை தாக்கியதில் சத்துணவு ஊழியர் ராஜம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜவளசந்திரம் கிராமமக்கள் அளித்த தகவலின்படி, தேன்கனிக்கோட்டை வனச்சரகர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, ராஜம்மாவின் உடலை தர மறுத்த உறவினர்கள், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால் மாவட்ட ஆட்சியர் வர வேண்டுமென தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யானைகளை அடர் வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட வேண்டும், உயிரிழந்த ராஜம்மாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். உயிரிழந்த ராஜம்மாவின் உடல் தற்போது உடற்கூறாய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.