கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர் சாலையில் இயங்கிவந்த முத்தூட் நிதி நிறுவனத்தில் கடந்த ஜனவரி மாதம் தங்க நகைகள் சுமார் 25 கிலோ கொள்ளையடிக்கப்பட்டன.
முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளை: வடமாநிலத்தவர்கள் குண்டர் சட்டத்தில் கைது! - 25kg worth gold robbery at muthoot finance
கிருஷ்ணகிரி: ஓசூர், பாகலூர் சாலையில் இயங்கிவந்த முத்தூட் நிதி நிறுவனத்தில் 25 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வடமாநில இளைஞர்கள் ஐந்து பேரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்தனர்.
ஓசூர் முத்தூட் பைனான்ஸ் கொள்ளை வழக்கு
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஏழு குற்றவாளிகளில் முக்கியக் குற்றவாளிகளான வடமாநிலத்தைச் சேர்ந்த விகாஸ் சிங், மங்களம்குமார், ரோகித்குமார், அர்ஜுன் பிரசாத், டிக்காராம் ஆகிய ஐந்து பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானுரெட்டி உத்தரவின்பேரில் ஐந்து பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
TAGGED:
தங்க நகை கொள்ளை வழக்கு