தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓசூரில் ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலை... அமைச்சர் சொன்ன குட் நியூஸ்! - Apple iPhone manufacturing factory in Tamil Nadu

ஓசூரில் ஆப்பிள் ஐபோன் நிறுவனம் அமைக்கப்பட உள்ளதால் சுமார் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 16, 2022, 8:49 PM IST

கிருஷ்ணகிரிமாவட்டத்தில் 'குட்டி ஜப்பான்' என அழைக்கப்படும் ஓசூர் பகுதியிலிருந்து குண்டூசி முதல் விமான உதிரிபாகங்கள் வரை தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆனால், உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் ஓசூருக்கும், மாநிலத்தின் பிற மாநிலங்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றன. குறிப்பாக, உள்நாட்டு சந்தைக்கு தேவையானப் பொருட்களைத் தயாரிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள், தற்போது ஓசூரை முக்கிய டார்க்கெட்டாக மாற்றியுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் முக்கியத்தொழில் நகரமாக மாற என்ன காரணம் தெரியுமா..?

50 ஆண்டுகளுக்கு முன் விதை:1973ஆம் ஆண்டு, அதாவது 50 வருடங்களுக்கு முன்பு மிகவும் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதியாக இருந்த ஓசூர், தமிழ்நாடு அரசின் சிப்காட் வாயிலாக தொழிற்துறை நிறுவனங்களை ஈர்க்கவும், வர்த்தக மற்றும் உற்பத்தியை உருவாக்கவும் ராணிப்பேட்டையைச்சேர்த்து மொத்த 2 பகுதிகளைப் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டது.

அதன் பின்பு, ஓசூர் மெல்ல மெல்ல தன்னுள் புதைத்து வைத்திருந்த வைரத்தை வெளியில் கொண்டு வர துவங்கியது. ஓசூர் தற்போது பெரிய உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிகளவில் உதவும் சப்ளையர்கள், அதாவது உதிரிப்பாகங்கள் மற்றும் இதர பொருட்களை உற்பத்தி செய்யும் MSME நிறுவனங்களை அதிகளவில் வைத்துள்ளது.

இடம் தயார்:இதைவிட முக்கியமாக, ஓசூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பிற மாநிலங்களுக்குக் கொண்டு சேர்க்க ஏதுவான மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட சாலை போக்குவரத்து சமீபத்தில் பெரியளவில் உதவி செய்து வருகிறது. இதுதான் புதிய மற்றும் பெரு நிறுவனங்களை ஈர்க்க முக்கியக் காரணமானது. இந்த வளர்ச்சியை மேம்படுத்தத் தமிழ்நாடு அரசின் சிப்காட் அமைப்பின் 3ஆவது மற்றும் 4ஆவது கட்ட வளர்ச்சி திட்டத்திற்கு சுமார் 2,223 ஏக்கர் நிலம் தேவை; இதில் 1,400 ஏக்கர் நிலத்தை அரசு சில மாதங்களுக்கு முன்பே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ஓசூரில் ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலை..அமைச்சர் குட் நியூஸ்!

இந்நகரில் இயந்திரத்தொழில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. டிவிஎஸ் மோட்டார், அசோக் லேலண்ட், டைட்டன் நிறுவனம், இந்துஸ்தான் மோட்டர்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், இந்துஸ்தான் யுனிவர்சல், கேடர்பில்லர், டாட்ரா வேக்ட்ரா, தி நீஜா ஏரோஸ்பேஸ் & ஏவிஎசன் லிமிடெட், பாட்டா இந்தியா லிமிடெட், ஆரொ கிரானைட், மதுகான் கிரைநைட், ஏசி ஈடு, INEL-இந்தியா நிப்பான் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட், சுந்தரம் பாஸ்ட்னர்ஸ், முதலான நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இங்குள்ளன. தமிழ்நாடு அரசால் 1538.41 ஏக்கரில் தொடங்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டை (சிப்காட்-1 & சிப்காட்-2) இங்கு செயல்பட்டு வருகின்றன.

டாடா குழுமம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பதற்காகக் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் அருகே சுமார் 4,684 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் தொழிற்சாலையை அமைத்து வருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலை: ஃபாக்ஸ்கான், விஸ்திரான் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய திறன்களைப் பயன்படுத்திப் பல ஆயிரம் கோடிக்கு ஒவ்வொரு வருடமும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்து வரும் நிலையில் இந்த இடைவெளியை நிரப்ப டாடா களமிறங்கியது. இந்த நிலையில் ஓசூரில், இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் 60,000 பேர் பணிபுரியும் வகையில் ஐபோன் உற்பத்தி ஆலையை டாடா நிறுவனம் அமைக்க உள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

உறுதி செய்த அமைச்சர் தங்கம்தென்னரசு:இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் வர உள்ளதால் தமிழர்களுக்கு அதிகளவில் வேலை கிடைக்குமென தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு இன்று (நவ.16) தகவல் தெரிவித்துள்ளார். அமைச்சர் தங்கம்தென்னரசு இன்று தகவல் கூறுகையில், தமிழ்நாடு கர்நாடக மாநிலம் எல்லையில் அமைந்துள்ள தமிழ்நாடு பகுதியான ஓசூரில் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபோன், எனப்படும் செல்போன் உற்பத்தி நிறுவனம் அமைய உள்ளதாகவும், தற்போது ஃபாக்ஸ்கான், பெக்ட்ரான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஐபோன் உற்பத்தி செய்து வருகின்றனர்.

60,000 பேருக்கு வேலை:அதில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மட்டும் தனது உற்பத்தியை அடுத்த 2 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது என்றும், இவை அனைத்தும் விரிவாக்கம் செய்து 60ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க உள்ளதாகவும், தமிழ்நாட்டில் துறைமுகம், சாலை கட்டமைப்பு, விமானநிலையம், அமைதியான சூழல், தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு காரணமாக தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று அமைச்சர் தங்கம்தென்னரசு தகவல் கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் புதிய தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தொழில் துறை சார்பில் ஏற்றுமதியில் ஏற்றம், முதலீட்டாளர்களின் முகவரி, தொழில் வளர்ச்சி 4.0, என்னும் பல்வேறு முன்னெடுப்புகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் சூழலில், தமிழ்நாட்டில் இருந்து சென்ற தொழிற்சாலைகளை மீண்டும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க நடவடிக்கை எடுப்பது, பன்னாட்டு தொழில் நிறுவனங்களை தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தொழில் நிறுவனங்களை ஈர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வீதியில் படித்த போட்டி தேர்வர்களுக்காக நவீன சென்டர்.. நெல்லை ஆட்சியர் அசத்தல்!

ABOUT THE AUTHOR

...view details