கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது ஐயப்ப பக்தர்கள் பயணித்த வேன் மோதியது. இந்தச் சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து படுகாயமடைந்த பக்தர்களை உடனடியாக மீட்டு ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்தில், குழந்தை நிகிதா, திருமூர்த்தி, சீனிவாசன், சிவகுமார், ராஜி, சுரேஷ் உள்ளிட்ட ஆறு பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு ஓசூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைப் பெற்றுவரும் காட்சி மேலும், விசாரணையில் பெங்களூரு மாகிடி சாலையிலிருந்து கடந்த 22ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றதாகவும் தரிசனத்தை முடித்து இன்று அதிகாலை பெங்களூரு நோக்கி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்ததில் ஐயப்ப பக்தர்கள் வேன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்,
இச்சம்பவம் குறித்து ஓசூர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க : தயாநிதி மாறன் அழைப்பாணையை வாங்கவில்லை - நீதிமன்றத்தில் காவல் துறையினர் பதில்