கர்நாடகாவில் தென்பெண்ணையாற்று நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக, ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக தொடர்ந்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
கெலவரப்பள்ளி அணையில் இருந்து 560 கன அடி நீர் வெளியேற்றம் - கெலவரப்பள்ளி அணை
கிருஷ்ணகிரி: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து 560 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும். தற்போது அணையின் நீர் மட்டம் 41.98 அடியாக உள்ளது. நேற்று (மே 29) அணைக்கு, விநாடிக்கு 480 கனஅடியாக வந்த தண்ணீர், அப்படியே வெளியேற்றப்பட்ட நிலையில், இன்று (மே 30) அணைக்கு நீர் வரத்து அதிகரித்து விநாடிக்கு 560 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து 560 கனஅடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் கெலவரப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம், மோரனப்பள்ளி, பாத்தகோட்டா, ஆழியாளம், கோபசந்திரம் உள்ளிட்ட இடங்களில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.