தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓசூரில் 'ஸ்பா' பெயரில் ஹைடெக் விபச்சாரம்.. 7 இளம்பெண்கள் மீட்பு.. 3 பேர் கைது! - Krishnagiri prostitution

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ஸ்பா பெயரில் விபச்சாரம் நடத்தி வந்த மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கைது விவகாரத்தில் துணை காவல் கண்காணிப்பாளரே நேரடியாக சென்று அதிரடி காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

By

Published : Jun 1, 2023, 10:57 AM IST

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர் பகுதி என்பது, தமிழ்நாட்டில் சென்னை, கோவைக்கு அடுத்ததாக உள்ள மிகப்பெரிய தொழில் நகரமாகும், இங்கு டிவிஎஸ், அசோக் லைலேண்ட், டைட்டன் உள்ளிட்ட முக்கிய தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களுக்குத் தேவையான உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் என ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் சுமார் 2 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

அதோடு, தமிழ்நாடு - கர்நாடக மாநிலத்தின் எல்லைப் பகுதி என்பதால் இருமாநிலங்களுக்கு இடையே வணிக ரீதியான பயன்பாட்டிற்கு ஓசூர் நகரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனால், நாளுக்கு நாள் ஓசூரில் தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

வெளியூர்களிலிருந்து இந்து வந்து தங்கியுள்ள இளைஞர்களைக் குறிவைத்து சிலர் விபச்சாரம் செய்து வருவதாகப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனைகள் நடத்தி அவ்வப்போது கைது நடவடிக்கைகளையும் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் கைது!

இந்நிலையில், ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மசாஜ் சென்டர் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் கிருஷ்ணகிரி - ஓசூர் சாலையில் உள்ள இரண்டு மசாஜ் சென்டரில் சோதனை செய்ததில் இளம் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இடைத்தரகர்கள் மூலம் இளம்பெண்களை அழைத்து வந்து விபச்சாரத்தில் சூடப்பன் (40), துளசிராமன்(21) மற்றும் ஈடுபடுத்திய 32 வயது பெண் ஒருவர் உட்பட மூன்று பேரை அதிரடியாக போலிஸார் கைது செய்தனர். மேலும் 7 இளம் பெண்களை மீட்ட போலீசார் அவர்களை அரசு காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தனி வீடுகள், பங்களாக்களை வாடகைக்கு எடுத்து ஸ்பா, மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பது தெரிய வந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தகவல் தருபவர்களின் விவரங்கள் ரகசிய காக்கப்படும் எனவும் டி.எஸ்.பி பாபு பிரசாத் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:'லவ் ஜிகாத்' முறையில் மாடலிங் இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார்!

ABOUT THE AUTHOR

...view details