தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா அரையிறுதி வரை செல்லும்: சடகோபன் ரமேஷ் ஆரூடம் - Krishnagiri

கிருஷ்ணகிரி : இந்தாண்டு நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா அரையிறுதி வரை செல்லும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் கூறியுள்ளார்.

சடகோபன் ரமேஷ்

By

Published : May 2, 2019, 9:35 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் மருத்துவமனை சார்பில் ’ஓசூர் கிரிக்கெட் லீக்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கும், சிறந்த மட்டையாளர், ஆட்ட நாயகன், தொடர்நாயகன் உள்ளிட்ட விருதுகளையும் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கி கெளரவித்தார்.

’ஓசூர் கிரிக்கெட் லீக்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் விருது வழங்கி கெளரவித்தார்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசும்போது, ‘ஓசூரில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கிறது. எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வீரர்கள் வளர்ந்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டியில் சிறந்த அணியாக விளங்கிவருகிறது. குறிப்பாக விராட் கோலி சிறந்த முறையில் விளையாடிவருகிறார் என கருத்துத் தெரிவித்தார்.

மேலும், இந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா அரையிறுதி வரை செல்லும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details