தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அலுவலர்களின் அலட்சியம்: வீணாகும் குடிநீர்!

கிருஷ்ணகிரி: கங்கலேரி கிராமத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட நீரை சேமித்துவைக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் குழாய் உடைந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர் சாலையில் வீணாவதால் அப்பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் குடிநீர்

By

Published : May 26, 2019, 11:04 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அன்றாடத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் குடிநீர் தட்டுப்பாடு, மாவட்டம் முழுவதும் மிகுந்து காணப்படுகிறது. இதனால் கிராம மக்கள் பல மைல் தூரம் நடந்தே சென்று தண்ணீரைப் பிடித்து வந்து பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் கங்கலேரி கிராமத்தில் மலை சந்து என்னுமிடத்திலுள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட நீரை சேமித்து வைக்கும் தொட்டியிலிருந்து குழாய் உடைந்து பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் சாலையில் வெள்ளம்போல் ஓடுகிறது.

வீணாகும் குடிநீர்

இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தண்ணீரை காசு கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கும்போது, அலுவலர்களின் அலட்சியத்தால் தண்ணீர் வீணாவது அப்பகுதி மக்களை வேதனை அடையச் செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details