கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வழக்கத்தைவிட வெயில் சுட்டெரித்து காணப்பட்ட நிலையில் திடீரென இரண்டு மணிநேரமாக இடைவிடாமல் கனமழை பெய்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஓசூர் மாநகராட்சிக்குள்பட்ட இராயக்கோட்டை சாலை, பேருந்து நிலைய எதிரே உள்ள சாலைகளில் மழை நீர் தேக்கி வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது.