கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி கட்டமைப்பு குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 26) நடைபெற்றது. கூட்டத்திற்கு மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
மேலும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி உள்ளிட்டோரும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்
பின்னர் காவேரிப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்ட, 30 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய புதிய படுக்கை வசதிகளை அமைச்சர் தொடங்கிவைத்தார்.
கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேலும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ், மகப்பேறு கால பெட்டகங்களும் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டன.
தாய்மார்களுக்கு மகப்பேறு கால பெட்டகங்கள் வழங்கிய அமைச்சர் அதன் பின்பு ஜகதேவி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், கரோனா தடுப்பூசி முகாமையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க:தடயவியல் இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்